110 பானைகள் கொண்டு பொங்கல் விழாவும் பாரம்பரிய கலை கலாச்சார நிகழ்வுகள்

(லியோன்)



உழவர் திருநாளை முன்னிட்டு மாபெரும் பொங்கல் விழா இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது .



மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராமிய சமூக மட்ட அமைப்புக்களின் ஏற்பாட்டில்   உழவர் திருநாளை முன்னிட்டு 110 பானைகள் கொண்டு பொங்கல் விழாவும் பாரம்பரிய கலை கலாச்சார நிகழ்வுகள் இன்று காலை 09.00 மணியளவில் மண்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர்  வி .தவராஜா தலைமையில் இடம்பெற்றது ..


பொங்கல் விழா சிறப்பு பூசைகள் பிரதேச செயலக வளாக ஆலயத்தில் இடம்பெற்றதை தொடர்ந்து பாரம்பரிய கலை கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது .

இந்த பொங்கல் விழா நிகழ்வை இரண்டாவது வருடமாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளரினால் சிறப்பாக சிறப்பித்தமைக்காக ஜெயந்திபுரம் கிராம பொது மக்களின் சார்பாக பிரதேச செயலாளருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார் .


இந்நிகழ்வில்  மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமிய அபிவிருத்தி சங்கம் , மாதர் அபிவிருத்தி சங்கம் ,சிரேஷ்ட பிரஜைகள் சங்கம் , சமுர்த்தி சங்கம் , மாதர் சங்கம் , சிறுவர் கழகம், கிராம மட்ட சிவில் குழுக்கள் ஆகியன இணைந்து  இரண்டாவது வருட பொங்கல் விழாவை வெகுசிறப்பாக சிறப்பித்தனர் .