வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு


(லியோன்)


மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட  பாடசாலை  மாணவர்க்கான  பாடசாலை கற்றல் உபகரணங்களும் , துவிச்சக்கர வண்டியும் மற்றும் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தில் கூடுதலான நிதியினை  சேகரித்த  வாழ்வின் எழுச்சி  முகாமையாளர்கள் , வாழ்வின் எழுச்சி  அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு  மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி  . தவராசா தலைமையில் பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது .


வருடந்தோறும் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சமூகங்களிடையே நிதியை சேகரித்து அந்த நிதியின் ஊடாக சமூக அபிவிருத்திக்கான வேலைத்திட்டங்களை மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் மேற்கொள்ளப் பட்டு வருகின்றது .   

அந்த வகையில்  பெறப்பட்ட நிதி மூலம் பாடசாலை மாணவர்களுக்கான சிசுதெரிய புலமைப்பரிசில்கள் , மருத்துவ உதவி , வீடுகள் திருத்துவதற்கான நிதி உதவி , சுயதொழிலுக்கான  நிதி உதவி மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல் போன்ற பல்வேறு பட்ட வேலைத்திட்டங்களை சமூக அபிவிருத்திக்காக செய்யப்படுகின்றன .

 இதன் ஒரு நிகழ்வாக மண்முனை வடக்கு பிரதேச செயலக வாழ்வின் எழுச்சி திணைக்களம் ஊடாக மாணவர்க்கான  பாடசாலை கற்றல் உபகரணங்களும் , துவிச்சக்கர வண்டியும் மற்றும் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தில் கூடுதலான நிதியினை  சேகரித்த  வாழ்வின் எழுச்சி  முகாமையாளர்கள் , வாழ்வின் எழுச்சி  அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு பரிசில்கள் மற்றும்கௌரவிக்கும்   நிகழ்வும்  இடம்பெற்றது .

வாழ்வின் எழுச்சி  சமூக அபிவிருத்தி  திணைக்களத்தினால் தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட சிறுவர் கெகுழு போட்டியில்  வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பணப்பரிசில்களும் ,இந்நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டது .

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி .எஸ் .எம் . சார்ள்ஸ் மற்றும் பிரதேச செயலக  உதவி பிரதேச செயலாளர் எஸ் .யோகராஜா ,  பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் , பிரதே செயலக பிரதம கணக்காளர் , திவிநெகும  திணைக்கள முகாமையாளர்கள் , வாழ்வின் எழுச்சி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .