வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் சுயதொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

(லியோன்)


மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி பிரிவினால் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  பகுதியில்  வெளிநாட்டு வேலை வாய்ப்பினை எதிர்பார்த்து கொண்டிருக்கும் பெண்களின் மனநிலையினை மாற்றி அவர்களின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்குடன் பல சுயதொழில் ஊக்குவிப்பு வேலைத்திட்டங்கள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .

இதன் கீழ் மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி பிரிவினால் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  பகுதியில்  வெளிநாட்டு வேலை வாய்ப்பினை எதிர்பார்த்து கொண்டிருக்கும் பெண்களின்  வருமானத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக  தெரிவு செய்யப்பட  10 பெண்களுக்கு  ஒருவருக்கு தலா  17 900  ரூபா பெறுமதியான சுயதொழில் உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது .

இதே போன்று  மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி பிரிவில்  மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின்  2015 ஆம் ஆண்டின் வேலைத்திட்டத்தின் வழங்கப்பட்ட   300,000 ரூபா  நிதி ஒதுக்கீட்டின் கீழ் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும்  வேலைத்திட்டத்தின்  பெண்கள் தலைமை தாங்கும் குடும்பப் பெண்களில்  10 பெண்கள்  தெரிவுசெய்யப்பட்டு ஒருவருக்கு தலா 30,000 ரூபா  பெறுமதியான சுயதொழில் உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது .


இந்நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது .

இந்நிகழ்வில் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சந்திரவாணி மனோகரன் , உளவளத்துணை உதவியாளர்களான  ரேணுகா சந்திரா , ஜனார்த்தினி நரசிம்மன் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர் .