பொலிஸ் உத்தியோகத்தர்கள் சத்தியப் பிரமாணம் மற்றும் உறுதிமொழியினை எடுத்துக்கொள்ளும் நிகழ்வு


(லியோன்)


2016 ஆம் ஆண்டுக்கான அரச  சேவை உத்தியோகத்தர்கள்  சத்தியப் பிரமாணம் மற்றும் உறுதிமொழி வழங்கும் நிகழ்வு நாடளாவியல் ரீதியில்   இடம்பெற்றது . 


இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் இந் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களை யதார்த்தமாக மாற்றியமைக்கும்  புதிய ஆண்டின்  ஆரம்பத்தில் காலடி வைக்கின்ற முதல் நாளில் பொலிஸ் உத்தியோகத்தர்களும் சத்தியப் பிரமாணம் மற்றும் உறுதிமொழியினை  எடுத்துக்கொள்ளும்  நிகழ்வு இடம்பெற்றது .

 சத்தியப் பிரமாணம் மற்றும் உறுதிமொழியினை  ஜனாதிபதி செயலக செயலாளர்களின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற  வேளையில்  அதன் ஒரு நிகழ்வு  மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெட்டி ஹாரச்சி தலைமையில் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய முன்றலில் இடம்பெற்றது

இந்நிகழ்வில் மட்டக்களப்பு  பொலிஸ் நிலைய அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர் .