இருதயபுரம் கோல்டன் ஈகள் விளையாட்டு கழகத்தின் வருடாந்த கிரிகெட் போட்டி இந்து கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.


(லியோன்)

மட்டக்களப்பு இருதயபுரம் கோல்டன் ஈகள் விளையாட்டு கழகத்தின் வருடாந்த கிரிகெட் போட்டி இன்று மட்டக்களப்பு இந்து கல்லூரி மைதானத்தில்  இடம்பெற்றது.
.

மட்டக்களப்பு இருதயபுரம் கோல்டன் ஈகள்  விளையாட்டு கழகத்தினால்   பிரதேச மட்டத்தில் விளையாட்டு வீரர்களின் விளையாட்டு  திறன்களை ஊக்குவிக்கும் நோக்குடன்  பல விளையாட்டு நிகழ்வுகளை  நடத்தி வருகின்றது  . 

இதன் ஒரு நிகழ்வாக புதிய வருடத்தை சிறப்பிக்கும் முகமாக  கோல்டன் ஈகள் கழக உறுப்பினர்களுக்கிடையிலான  சிநேகபூர்வ  கிரிகட் போட்டி  கழகத்தின் தலைவர் .து . ராஜ்குமார் தலைமையில் இன்று மட்டக்களப்பு இந்து கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது ,

இடம்பெற்ற கிரிகெட் போட்டி நிகழ்வில் மட்டக்களப்பு இருதயபுரம் கோல்டன் ஈகள்  கழக அனைத்து  விளையாட்டு  வீரர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .