கழிவு பொருட்களிலான உயிர் வாயு தயாரித்தல் தொடர்பான தொழில்நுட்பகளம் ஆய்வு

(லியோன்)
மட்டக்களப்பு கல்லடி ரிவேரா  விடுதியில்  அமைக்கப்பட்டுள்ள    கழிவு பொருட்களிலான  உயிர் வாயு தயாரித்தல்  தொடர்பான தொழில் நுட்ப களம்   ஆய்வினை மேற்கொள்ள  மட்டக்களப்பு மாவட்ட  பாடசாலை மாணவர்கள்  கள விஜயத்தினை இன்று  மேற்கொண்டனர் .

மட்டக்களப்பு மாவட்டத்தில்  ஜனதாக்சன்  நிறுவனம் நடைமுறைப்படுத்தும் ஒருங்கிணைந்த சமூக அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களின்  தொழில்நுட்பத்தினை   அபிவிருத்தி செய்யும் நோக்கில்   ஐரோப்பிய  வங்கியின் நிதி உதவியுடன் ஜதாக்சன்  மற்றும் டீபல்  இன் நெட்  நிறுவனம்  இணைந்து பாடசாலை மாணவர்களுக்கிடையிலான  விரிவாக்கல்   தொடர்பாக செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தி  வருகின்றது  . 

இதன் கீழ்  சுற்றாடல் அதிகார சபை மற்றும்  கிழக்கு மாகான  முதலமைச்சரின்   அலுவலகம்   அனுசரணையில்  மட்டக்களப்பு  மாவட்ட  பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட பாடசாலை  மாணவர்களுக்கும்  மற்றும் பாடசாலை ஆசிரியர்களுக்குமான  தொழில்நுட்பத்தினை   அபிவிருத்தி செய்யும் நோக்கில்  இன்று மட்டக்களப்பு    கல்லடி ரிவேரா  ஹோட்டலில்   அமைக்கப்பட்டுள்ள    கழிவு பொருட்களிலான  உயிர் வாயு தயாரித்தல்   தொடர்பான  தொழில் நுட்ப தளத்திற்கான   களவிஜயத்தை  மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது    .  

இதன்  போது   மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட 33  பாடசாலைகளிலிருந்து      69  மாணவர்களும்,  33 ஆசிரியர்களுடன்   ஜனதாக்சன்  நிறுவனத்தின் உத்தியோகத்தர் திருமதி அனுலா  அன்டன்  ஆகியோர்  கள விஜயத்தில் கலந்துகொண்டனர்  .

இதன் போது  கல்லடி ரிவேரா  ஹோட்டல்  உரிமையாளர்  டி .தர்சன்  அவர்களினால்   கழிவு பொருட்களிலான  உயிர் வாயு தயாரித்தல்  தொடர்பிலான  தொழில் நுட்ப விளக்கங்களும் இதன் பயன் பாடுகள்  தொடர்பாகவும் மாணவர்களுக்கு  விளக்கமளிக்கப்பட்டது .

மட்டக்களப்பு கல்லடி ரிவேரா ஹோட்டல் நிறுவனத்தினர்   உயிர் வாயு தொழில் நுட்பத்தையும் அதன் பயனையும் அனுபவித்து  உயிர் வாயு  தொழில் நுட்பத்தினை விரிவாக்குவது தொடர்பாக  பாரிய பங்களிப்பு செய்து வருகின்றமை  குறிப்பிடத்தக்கது .