ஆங்கில மொழித்திறன் அபிவிருத்தி போட்டி பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு


( லியோன் )

மட்டக்களப்பு  வலய பாடசாலை  மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட  ஆங்கில மொழித்திறன் அபிவிருத்தி  போட்டி பரீட்சையில்  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  பரிசில்களும் சான்றிதழ்ககளும் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட்  நிறுவகம்   டயக்கோஸியா நிறுவன நிதி உதவியுடன்  மட்டக்களப்பு  வலயத்தில் தெரிவு செய்யப்பட பாடசாலை  மாணவர்களுக்கிடையில்   நடத்தப்படட்  ஆங்கில மொழித்திறன்  அபிவிருத்தி போட்டி பரீட்சையில்  வெற்றி பெற்ற வலய பாடசாலை மாணவர்களுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்ககள் வழங்கும் நிகழ்வு கரித்தாஸ் எகெட்  நிறுவகம் இயக்குனர் அருட்பணி ஜெரோம் டிலிமா தலைமையில் மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் இன்று  இடம்பெற்றது .
  
இன்று இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட  அருட்தந்தை  கருத்து தெரிவிக்கையில்   பாடசாலை மாணவர்களுக்கிடையில்  ஆங்கில அறிவுத்திறனை  மேம்படுத்தும் திட்டத்தில்    ஒருங்கிணைந்த சமூக அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களின் ஆங்கில மொழித்திறனை அபிவிருத்தி செய்யும் நோக்கில்   மட்டக்களப்பு  வலய பாடசாலை  மாணவர்களுக்கிடையிலான ஆங்கில மொழித்திறன் போட்டி பரீட்சைகளை நடத்தப்பட்டு ஊக்குவிப்பு திட்டங்களை நடைமுறை படுத்தி வருகின்றது .

இதன் கீழ்  மட்டக்களப்பு  வலய பாடசாலைகளில்  ஆங்கில அறிவுத்திறன் பின்தங்கிய நிலையில்  காணப்படும் பாடசாலைகளை  தெரிவு செய்து  இவ்வாறான செயல்திட்டங்களை நடைமுறைப் படுத்தி  இவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும்  வழங்கி வருவதாக தெரிவித்தார் . 


இன்று இடம்பெற்ற  பரிசளிப்பு நிகழ்வில்  பிரதம அதிதியாக  மட்டக்களப்பு  கரித்தாஸ் எகெட்  நிறுவக இயக்குனர் அருட்பணி  ஜெரோம் டிலிமா ,  டயக்கோஸியா நிறுவன திட்ட உத்தியோகத்தர் . பி . செல்லத்துரை நிறுவன திட்ட ஊக்கு விப்பாளர்கள் ,  பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆயோர்  கலந்துகொண்டனர் .