சிவானந்தா தேசிய பாடசாலையின் “சிவானந்தன்” 08வது இதழின் வெளியீட்டு நிகழ்வு

இலங்கையின் பிரபல பாடசாலைகளில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு கல்லடி,உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையின் செயற்பாடுகள் அடங்கிய “சிவானந்தன்” 08வது இதழின் வெளியீட்டு நிகழ்வு பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலை அதிபர் க.மனோராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ.சுகுமாரன்,சிவானந்தா தேசிய பாடசாலையின் அபிவிருத்தி சங்க செயலாளர் டாக்டர் ரி.கேதிஸன்,பழைய மாணவர் சங்க செயலாளர் என்.தினேஸ்குமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

நூல் வெளியீட்டினை பாராளுமன்ற உறுப்பினர் ஆரம்பித்துவைத்ததுடன் நூல் நயவுரையினை கலாசார உத்தியோகத்தர் எஸ்.மலர்ச்செல்வன் நிகழ்த்தினார்.

சிவானந்தா தேசிய பாடசாலையின் சிறப்புகளையும் சாதனைகளையும் தாங்கியதாக வருடாந்தம் சிவானந்தன் இதழ் தாங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.