(லியோன்)
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட அமிர்தகழி கருணை பாலர்
பாடசாலை சிறார்களின் ஒளி
விழா நிகழ்வு இடம்பெற்றது .
மட்டக்களப்பு அமிர்தகழி கருணை பாலர்
பாடசாலை சிறார்களின் ஒளிவிழா நிகழ்வு அதிபர் திருமதி .பிரதீபா
தர்ஷன் தலைமையில் அமிர்தகழி
சித்தி விநாயகர் வித்தியாலய மண்டபத்தில் 02.12.2015 இடம்பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக சிறார்களினால் நிகழ்வுக்கு வருகை தந்த
அதிதிகளை வரவேற்கும் நிகழ்வுகள் இடம்பெற்றது .
அதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் சிறார்களின் ஒளிவிழா கலை நிகழ்வுகள் இடம்பெற்றது .
இதனை தொடர்ந்து சிறார்களுக்கு அதிதிகளினால் பரிசு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் ஒளிவிழா நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு பெற்றது .