டச்பார் - நாவலடி கனிஷ்ட வித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

(லியோன்)


மட்டக்களப்பு  கல்வி வலயத்திற்குட்பட்ட    டச்பார் - நாவலடி  கனிஷ்ட வித்தியாலய மாணவர்களுக்கு  பாடசாலை உபகரணங்கள் வழங்கும்  நிகழ்வு இடம்பெற்றது .


  கிழக்கு மாகாணம்  சிரேஷ்ட  பிரதி பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டலுக்கு அமைவாக    மட்டக்களப்பு   நாவலடி   172 கிராம சேவை பிரிவு  சிவில் பாதுகாப்பு குழு மற்றும்   ஈகல்  சமூக  வியாபர நிறுவன அனுசரணையில்    மட்டக்களப்பு   டச்பார் - நாவலடி  கனிஷ்ட வித்தியாலய மாணவர்களுக்கு  பாடசாலை உபகரணங்கள் வழங்கும்  நிகழ்வு   இன்று இடம்பெற்றது

ஆரம்ப நிகழ்வாக   பாடசாலை மாணவர்களினால்  மலர் மாலை அணிவித்து  அதிதிகளை  அழைத்து வரப்பட்டனர்  அதனை தொடர்ந்து   மங்கள விளக்கேற்றப்பட்டு ,   இறைவணக்கத்துடன்  தேசிய கீதம் இசைக்கப்பட்டு  நிகழ்வுகள் ஆரம்பமானது .  

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய  கிழக்கு மாகாணம்  சிரேஷ்ட  பிரதி பொலிஸ் மா அதிபர்  கூறுகையில்  பல சமூக நலன் தொடர்பான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும்  அதில் ஒரு திட்டமாகவே  இப்பகுதியில்  வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்களின்  பாடசாலை மாணவர்களின் கல்வி திறனை ஊக்குவிக்கும் நோக்குடன்  அவர்களுக்கு தேவையான   ஒருவருடத்திற்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள்  வழங்கி வைப்பதாக தெரிவித்தார் .

இந்த பணி  இன்றுடன்  நிறைவடையாது   தொடர்ந்து  இப்பாடசாலை மாணவர்களுக்கு எதிர் வரும்  வருடங்களிலும்  பாடசாலை கற்றல் உபகரணங்கள்  வழங்குவதாகவும் , தமது ஒய்வு நிலை காலத்திலும் இத்திட்டத்தை  தொடர்ந்து  மேற்கொள்வதாகவும் தெரிவித்தார் .   

இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக கிழக்கு மாகாண  சிரேஷ்ட  பிரதி பொலிஸ் மா அதிபர்  லலித்  ஜயசிங்க , நீர் வழங்கல்  வடிகால் அமைச்சின் செயலாளர் சாமிந்த சில்வா , காத்தான்குடி  பொலிஸ் பிரிவு  பொலிஸ் பொறுப்பதிகாரி . . வெதகேதர, அரசடி சம்பத் வங்கி  முகாமையாளர்  சுரேஷ் , ஈகல்   சமூக  வியாபர நிறுவன பணிப்பாளர் லலித் காரியவன்ச  மற்றும் நாவலடி சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் , பாடசாலை ஆசிரியர்கள் , பாடசாலை மாணவர்கள் , பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .