தொழில் தகைமை உடைய,மனித வளத்தின் பெறுபேறுகள் குறைந்த மாவட்டமாக மட்டக்களப்பு உள்ளது - மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ் . கிரிதரன்

(லியோன் )

 இலங்கையில் வேலையற்ற இளைஞர் யுவதிகள்  அதிகமாக உள்ள  மாவட்டமாகவும்,  தொழில் தகமை பெறுபேறுகள்  மிக குறைந்த  நிலையில்  காணப்படும்  மாவட்டமாகவும்  மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுவதாக  மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ் . கிரிதரன் தெரிவித்தார் .



மட்டக்களப்பு  மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு  வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன்  மட்டக்களப்பு  பெறேன்டினா தொழில் வாய்ப்பு  நிலையத்தின்  அனுசரணையில்   மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய்   தொழில் நுட்ப  கல்லூரியில்   மாபெரும் தொழில் வாய்ப்பு சந்தை  இன்று இடம்பெற்றது .

 இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக மாவட்ட மேலதிக   அரசாங்க அதிபர்  எஸ் . கிரிதரன்  கலந்துகொண்டார் .
தொடர்ந்து இந்நிகழ்வில் உரையாற்றும் போது  மட்டக்களப்பு மாவட்டத்தில்  தொழில் செய்யக் கூடிய  உரிய வயதை அடைந்த நிலையில் சுமார் ஒன்றரை இலட்சத்திற்கு மேற்பட்ட  இளைஞர் யுவதிகள் காணப்படுகின்றார்கள் .

இவர்கள்  அனைவரும் தாய், தந்தை அல்லது சகோதரர்களின் உழைப்பிலே தங்கி வாழக் கூடியவர்களாக இருகின்றார்கள் .

இளைஞர் யுவதிகளின்  உழைப்பினை இந்த நாட்டின் அபிவிருத்திக்காக செலவிடக்கூடிய  மட்டத்தில் இருகின்ற இந்த இளைஞர் பரம்பரையின்  ஊடாக அபிவிருத்தி செயல்பாடுகளை செய்து   மிக விரைவான ஒரு அபிவிருத்தியை  அடைய முடியாத நிலையில் மட்டக்களப்பு மாவட்டம்  இருக்கிறது .

மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்த மட்டில்  தொழில் தகமை உடைய மனித வளத்தின் பெறுபேறுகள்  மிக குறைந்த  நிலையில் காணப்படுகின்ற  மாவட்டமாக மட்டக்களப்பு காணப்படுகின்றது .

இதனால் தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொள்ள கூடிய தகமை உள்ளவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதன் காரணத்தால்  எங்களுடைய பிரதேசத்தில் ஒரு தொழிலை தொடங்கி நடாத்துவதற்கு முதலீடு செய்யக்கூடிய நிறுவனங்கள் இருந்த போதிலும்  தொழிலை செய்வதற்கு வெளி மாவட்டத்தில் இருந்து வரவேண்டிய நிலை கானப்படுகின்றது .

எனவே இந்த நிலை மாறி  இளைஞர் யுவதிகள்  தங்களின் தகமைகளுக்கு  ஏற்றவகையில்  தங்களின்  தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொள்ள  தொழில் கல்வியினை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துக்கொண்டார் .

இன்று இடம்பெற்ற இந்த தொழில் வாய்ப்பு  சந்தையானது   மட்டக்களப்பு தொழில் நுட்ப கல்லூரியில் தொழில் பயிற்சியினை முடித்து கொண்டு வெளியேறும் மாணவர்களுக்கு உள்நாட்டு , வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ளும் நோக்குடனும்  இந்நிகழ்வு இடம்பெற்றது .

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய்  தொழில் நுட்ப  கல்லூரியில் இன்று இடன்பெற்ற மாபெரும்  தொழில் வாய்ப்பு  சந்தையில் மட்டக்களப்பு மாவட்டத்தின்    இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை  பெற்றுக்கொடுக்கும் முகமாக   இலங்கையில் உள்ள தொழில் நிறுவனங்களான  மட்டக்களப்பு தொழில் வாய்ப்பு மத்திய நிலையம்  மற்றும் சனச , சீமா ,வேலண்டினா ,டெமோ ஆகியன  நிறுவனங்களும்   அதன்  முகாமையாளர்களும்  கலந்துகொண்டனர்.