தேசிய விளையாட்டுப்போட்டியில் கிழக்கு மாகாணத்துக்கு பெருமை சேர்த்த மட்டக்களப்பு கபடி அணி

தேசிய கபடிப்போட்டியில் கிழக்கு மாகாண அணி வடமாகாண அணியை வெற்றிகொண்டு இந்த ஆண்டுக்கான தேசிய சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.

இலங்கையின் 41வது தேசிய விளையாட்டு விழாவின் கடிப்போட்டி மன்னாரில் நடைபெற்றுவந்தது.

இறுதிப்போட்டியானது வட மாகாண அணிக்கும் கிழக்கு மாகாண அணிக்கும் இடையில் நடைபெற்றது.

இந்த போட்டியில் 38க்கும் 12 என்ற புள்ளிகளைப்பெற்று 26புள்ளிகளை அதிகமாக பெற்று கிழக்கு மாகாண அணி தங்கப்பதக்கத்தினைப்பெற்றுக்கொண்டது.

கிழக்கு மாகாண அணியினை பிரதிநிதித்துவப்படுத்தி மட்டக்களப்பு மாவட்ட கபடி அணியினர் இந்த போட்டியில் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.