முன்னாள் முதலமைச்சர் உள்ளிட்ட மூவருக்கு விளக்க மறியல்(video)

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதாகி குற்றப் --புலனாய்வுத் துறை  தலைமையகத்;தில்  50 நாட்களாக தொடர்ந்தும்  தடுத்து வைக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன்   இன்று புதன்கிழமை  மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான சந்தேக நபர்களில் ஒருவரான இவர் மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்  குற்றப்புலனாய்வுத்துறையினரால் முன் நிறுத்தப்பட்ட போது ட போது  எதிர்வரும் 16ம் விளக்கமறியலில்  வைக்குமாறு   நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டிருந்தது
.

2005ம் மட்டக்களப்பு புனித மரியாள் இனனர் பேராலயத்தில்  நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது தேவாலயத்திற்குள்ளே வைத்து ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார் சம்பவத்தில் அவரது மனைவி உட்பட  சிலர்  அவ்வேளை தாயமடைந்தனர்

இந்த கொலை தொடர்பாக  தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் முன்னாள் தேசிய அமைப்பாளரான பிரதீப் மாஸ்டர்  எனப்படும் எட்வின் சில்லா கிருஸ்ணானந்தராசா  முன்னாள் உறுப்பினரான உறுப்பினரான   கஜன் மாமா  என்றழைக்கப்படுமு; ரெங்கசாமி கனகநாயகம் ஆகியோர்  கடந்த அக்டோபர்  மாதம் 8ம் திகதி  குற்றப்புலனாய்வுத் துயைினரால்   கைது செய்யப்பட்டு ஏற்கனவே மட்டக்களப்பு சிறையில்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனா.


 இவர்கள் கைதாகி  4ம் நாள் அதாவது அக்டோபர் 12ம் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்பு ச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாயவு தலைமையக்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இன்று  புதன்கிழமை  மட்டக்களப்பு மஜிஸ்திரேட்  நீதிமன்ற நீதிபதி  எம். என் அப்துல்லாஹ் முன்னிலையில் இவர் குற்றப்புலனாய்வுத் துறையினரால் ஆஜர் செய்யப்பட்ட போது எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு   உத்தரவிடப்படடது.

அவர் சட்டத்ரைனி ஊடாக முன் வைத்த வேண்டுகோளின் பேரில்  சிறையில்  தனியாக வைக்குமாறு நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது

குறித்த  கொலை தொடர்பான ஏனைய   இரு சந்தேக நபர்களின் விளக்கமறியலும் அன்றைய தினம் வரை நீதிமன்றத்தால் நீடிககப்பட்டுள்ளது.

அதேவேளை நீதிமன்த்திலிருந்து சிசச்சாலைக்கு அழைத்து செல்லும் வேளை ளியில் வந்த சிவனேசதுரை சந்திரகாந்தன் ''நான் குற்றவாளி அல்ல என்று மட்டக்களப்பு கிறிஸ்தவ மக்களிடம் கூறுஞ்கள் " என பத்திரிகயாளர்களிடம் தெரிவித்தார்.