சவூதியில் இலங்கையின் மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணை மீட்குமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த வீட்டுப்பணிப்பெண்னை மீட்டு அவரது குடும்பத்தில் இணைக்க நடவடிக்கையெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தினை வலியுறுத்தி மட்டக்களப்பில் பறை அடித்து கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டது.


இன்று புதன்கிழமை மாலை மட்டக்களப்பு காந்திபூங்கா அருகில் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பினால் இந்த போராட்டம் நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள், அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகள்; உட்பட சமூக ஆர்வலர்களும் இந்த போராட்டத்தில் இணைந்துகொண்டனர்.

இலங்கையை சேர்ந்தா வீட்டுப்பணிப்பெண் ஒருவருக்கு மரண தண்எதிர்வரும் வெள்ளிக்கிழமை கல் எறிந்து கொலைசெய்யவேண்டும் என சவூதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

குறித்த பெண் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையிலும் அது தொடர்பில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையே இருந்துவந்ததாக கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.

இலங்கைக்கு அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்புக்காக செல்லும் பாதுகாப்பினை உhயி முறையில் உறுதிப்படுத்தவேண்டும் எனவும் தெரிவித்தனர்.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் “வாழ்வதற்கு எங்களுக்கும் பெண்களுக்கும் உரிமையுண்டு”,”தொழிலாளர் உரிமையை உறுதிசெய்யவேண்டும்”, “தண்டனையை ரத்துச்செய்யவேண்டும்”,உயிரைப்பறிக்கும் உரிமை எவருக்கும் இல்லை”,போன்ற பல்வேறு சுலோகங்கள் தாங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்ததுடன் குறித்த பெண்ணின் விடுதலை தொடர்பில் இலங்கை அரசாங்கம் உhயி நடவடிக்கையெடுக்கவேண்டும் என கோரும் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.