சிவானந்தா தேசியப்பாடசாலையின் 88ஆம் ஆண்டு சா.தர மாணவர்கள் அனுசரணையில் கல்விக் கருத்தரங்கு

மட்டக்களப்பு சிவானந்தா தேசியப்பாடசாலையின் 1988ஆம் ஆண்டு சாதாரணதர மாணவர்கணின் அனுசரணையுடன் யாழ் இ;ந்துக் கல்லூரி ஆசிரியர்களால் சிவானந்தா வித்தியாலயம், விவேகானந்த மகளிர் மகா வித்தியாலயம் ஆகியவற்றிலிந்து இம்முறை சாதாரண தரப்பரீட்சையில் தோற்றவுள்ள மாணவ மாணவிகளுக்கான கருத்தரங்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.


தினம் சிவானந்த தேசியப்பாடசாலையின் மண்டபத்தில் நடைபெற்ற இக் கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில், மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

அதே நேரம், பாடசாலை அதிபர் எஸ்.மனோராஜ், மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் தேவசிங்கம், பழைய மாணவர்களும் கலந்து கொண்டனர்.

கணித, விஞ்ஞானப்பாடங்களுக்காக நடத்தப்பட்ட இக் கல்விக் கருத்தரங்கில் யாழ் இந்துக் கல்லூரி ஆசிரியர்களான அ.கஜேந்திரன், சோ.ஹரிகரன், கே.உமாகரன் உள்ளிட்டோர் விரிவுரைகளை நடத்தினர்.

இரண்டு பாடசாலைகளிலும் தனித்தனியாக நடைபெற்ற இக் கருத்தரங்குகளில் பாடசாலைகளின் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.