சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் விழிப்புணர்வு ஊர்வலம்

சர்வதேச மாற்றுத்திரனாளிகள் தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இன்று வியாழக்கிழமை பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.


சர்வதேச  மாற்றுத்திரனாளிகள் தினத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பிரதான நிகழ்வு மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது.

மாற்றுத்திரனாளின் உடல் உள திறன்களை வெளிப்படுத்துமுவும் மக்களுக்கு மாற்றுத்திரனாளிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திரனாளிகளின் அமைப்புக்களை ஒருங்கிணைத்து இன்று (03) காலை  மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலம் மட்டக்களப்பு புளியந்தீவு மரியன்னை பேராலயத்திளிருந்து ஆரம்பித்து பிரதான வீதிவழியாக மகாஜனா கல்லூயை வந்தடைந்து அதன் பின்னர் அங்கு பிரதான நிகழ்வுகள் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் சா.அருள்மொழி தலைமையில் நடைபெற்ற நிகழ்வுகளில் பிரதம விருந்தனராக கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் க.கருணாகரன் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக  கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின்
என்.மணிவண்ணன் , மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் , மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வெ.தவராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது மாற்றுத்திரனாளிகளும் அவர்களுடன் இணைந்து செயற்படும் சமூக சேவை அமைப்புக்களும் கலந்துகொண்டதுடன்,இதன்போது மாற்றுத்திரனாளிகளினால் வீதி நாடகங்களும், கலை நிகழ்வுகளும் நிகழ்த்தப்பட்டன.