கைதியொருவர் வாவியில் குதித்த சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது .

(லியோன்)

நீதிமன்றத்திலிருந்து தப்பியோடிய  கைதியொருவரை   சிறைச்சாலை அதிகாரிகளினால்  பிடித்து மீண்டும் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்திய சம்பவமொன்று  இன்று செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்றுள்ளது .

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியை சேர்ந்த வாமதேவன் ராஜதுரை  வயது 34  அப்பகுதியில் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக  வவுணதீவு பொலிசாரினால் கைது செய்யப்பட்டு  கடந்த ஆறு மாதங்கள் சிறை தண்டனை  வழங்கப்பட்டு அண்மையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் .

 விடுதலையான   நபர்   மீண்டும்  நேற்று வவுணதீவு  பகுதியில்  துவிச்சக்கர வண்டி  திருடியதாக  வவுணதீவு பொலிசாரினால்  கைது செய்யப்பட  இன்று மட்டக்களப்பு பிரதான நீதி மன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்தியுள்ளனர் .

 இந்த நிலையில்   கைதுசெய்யப்பட்டவர்  மலசல கூடத்திற்கு செல்ல வேண்டும்  என கூறியதன் காரணமாக  சிறைச்சாலை அதிகாரிகளினால்  கைதியை மலசல கூடத்திற்கு அழைத்து  செல்லும் போது கைதி  நீதிமன்ற வளாகத்தில் இருந்து  தப்பியோடி  அருகில் உள்ள வாவியில்  குதித்து ஆழமான  நீர் நிலை பகுதிக்குள்  சென்ற நிலையில்    சிறைச்சாலை அதிகாரிகளான  சபாபதி நடராஜா மற்றும்  ஜெ . ரோயிஸ்டன் ஆகிய இருவரும்   இணைந்து   வாவிக்குள் சென்று  அவரை கைதுசெய்து  மீண்டும்  நீதி மன்றில் ஆஜர்படுத்துயுள்ளனர் .

இன்று இடம்பெற்ற இந்த சம்பவம் மட்டக்களப்பு நகரில் பெறும் பரப்பரப்பை ஏற்படுத்தி  இருந்தமை குறிப்பிடத்தக்கது  .