(லியோன்)
கிறிஸ்து பிறப்பு விழாவை
முன்னிட்டு
மட்டக்களப்பு
அம்கோர் நிறுவனத்தின் ஒளிவிழா நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது .
மட்டக்களப்பு
அம்கோர் நிறுவனத்தின் உத்தியோகத்தர்களினால்
ஏற்பாடு செய்யப்பட ஒளிவிழா நிகழ்வு
அம்கோர் நிறுவன திட்ட
முகாமையாளர்
எஸ் . சக்தீஸ்வரன் தலைமையில் நிறுவன அலுவலகத்தில் இடம்பெற்றது .
ஆரம்ப நிகழ்வாக மங்கள விளக்கேற்றபட்டு
இறைவணக்கத்துடன்
ஒளிவிழா கலை நிகழ்வுகள்
ஆரம்பமானது
.
இந் ஒளிவிழா
நிகழ்வில்
பிரதம
விருந்தினராக
மட்டக்களப்பு
ஹென்டிக்கப்
நிறுவனத்தின்
திட்ட முகாமையாளர் கிறிஸ்டி சந்திரகாந் , விசேட அதிதியாக அம்கோர்
நிறுவன தலைமை அதிகாரி பி . முரளிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர் .
இடம்பெற்ற ஒளிவிழா நிகழ்வில் அம்கோர் நிறுவன உத்தியோகத்தர்கள்
நிறுவன
சமூக ஊக்குவிப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டதுடன் அவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது
.