கல்லடி ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் கந்த சஸ்டி விரதம் ஆரம்பம்

இந்துக்களின் மிக முக்கியத்துவமிக்க விரதங்களில் ஒன்றான கந்தர் சஸ்டி விரதம் இன்று நாடெங்கிலும் உள்ள ஆலயங்களில் ஆரம்பமானது.

முருகப்பெருமனை நினைந்து அனுஸ்டிக்கப்படும் இந்த விரதமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.

ஈழத்து திருச்செந்தூர் எனப்போற்றப்படும் மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் கந்த சஸ்டி விரதம் சிரப்பாக இன்று ஆரம்பமானது.

இன்று முற்பகல் தொடக்கம் யாகம் மற்றும் அபிசேகம் முருகப்பெருமானுக்கு செய்யப்பட்டு விரதம் அனுஸ்டிப்போருக்கு தெற்பை அணியும் நிகழ்வு நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து விசேட பூஜை நடைபெற்றதுடன் கந்தர் சஸ்டி விரதத்தினை அனுஸ்டிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள விசேட கும்பத்துக்கும் பூஜைகள் நடைபெற்றதுடன் அடியார்கள் பூக்கள் இட்டு வணங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

இந்த விரத நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.