மாபெரும் புத்தக கண்காட்சியும் விற்பனையும்

( லியோ  

மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலக நலன்புரி சங்கமும்  கொழும்பு  ஜெயா புத்தகசாலை நிறுவனமும் இணைந்து நடாத்தும் மாபெரும் புத்தக் கண்காட்சியும் விற்பனையும் இன்று மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மண்டபத்தில் வலயக் கல்விப்பணிப்பாளர் கே .பாஸ்கரன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் .எஸ் .சித்திரவேல்  திறந்து வைத்தார்.


இந்த கண்காட்சியுடன் இடம்பெறுகின்ற  புத்த  விற்பனையின்  ஊடாக   மட்டக்களப்பு மாவட்ட  கல்வி வலய  பாடசாலை மாணவர்கள் தமது   புதிய பாடதிட்டத்திட்கு  அமைவான  அனைத்து புத்தகங்களையும்   இங்கு மலிவான முறையில் பெற்றுக்கொள்ள  முடியும் என  புத்தகசாலை நிறுவன  முகாமையாளர்  தெரிவித்தார் .

இந்த புத்தக விற்பனையின் ஊடாக புதிய  தொழில்நுட்பம் , தகவல் தொடர்பாடல் , உயர்தர விஞ்ஞானம் , வர்த்தகம் ,ஆங்கிலம்,  கல்வி பொது சாதாரண தரம்  மற்றும் சிறுவர்களுக்கான  அனைத்து  புத்தகங்களையும்  மாணவர்கள் பெற்றுக்கொள்ள முடியும் .
மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை மாணவர்களின் கல்வி திறனை ஊக்குவிக்கும் நோக்குடன் புதிய பாடத்திட்டத்திற்கு பயன் தரும்  வகையில் இந்த  புத்தக  கண்காட்சியினையும்  மற்றும் விற்பனையினை ஆரம்பித்துள்ளதாக     மட்டக்களப்பு வலய கல்வி அலுவலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்  .

இன்று ஆரம்பமாண கண்காட்சி  நிகழ்வில் வலயக் கல்வி திட்டமிடல் பணிப்பாளர் .எஸ் .சசிந்திர சிவகுமார் , வலயக் கல்வி நலன்புரிச் சங்க செயலாளர்  வி . மணிராஜ்  , கொழும்பு ஜெயா புத்தக நிறுவன முகாமையாளர் டி . . டிக்சன் மற்றும் வலய பாடசாலைகளின் அதிபர்கள் ,பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .

இன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட  இந்த புத்தக  கண்காட்சியும் ,விற்பனையும் இன்று (04) முதல் எதிர்வரும்  நவம்பர் 08  திகதி வரை காலை 08.00  மணி முதல் மாலை 08.00  மணி வரை தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு இடம்பெறவுள்ளது   .