மட்டக்களப்பு – அம்பாறை மறை மாவட்டத்தின் நான்காவது மகாநாடு

( லியோ,ஜே.எச்.இரத்தினராஜா)  


மட்டக்களப்பு மறை மாவட்டம் தனி மறை மாவட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டதன்  பின்னர் நடைபெறுகின்ற நான்காவது மறை மாவட்ட மேய்ப்புப்பணிச்சபையின்  வருடாந்த மகாநாடு  சத்துருக்கொண்டானில் அமைக்கப்பட்டுள்ள புதிய கிலெனி மேய்ப்புப்பனிச்சபை  நிலையத்தில்  மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டைகை தலைமையில் இடம்பெற்றது .

ஆரம்ப நிகழ்வாக புதிய கிலெனி மேய்ப்புப்பனிச்சபை  நிலையத்தை  ஆயரினால் ஆசிர்வதிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது . அதனை தொடர்ந்து  பொது நிலையினரின் ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை எக்ஸ் .டக்ளஸ்ஜேம்ஸினால் வரவேற்புரை இடம்பெற்றது .

 இதனை தொடர்ந்து  நிறைவு பெற்ற அர்ப்பண ஆண்டின் செயல்திட்டங்கள் சிறப்பாக இடம்பெற  உழைத்த அனைத்து தரப்பினருக்கும் ஆயரினால்  பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துகொள்ளப்பட்டது  . 

தொடர்ந்து இடம்பெற்ற மகாநாட்டில்  திருத்தந்தை பிரான்சீஸ் 2015 டிசம்பர்  08ஆம் திகதி தொடக்கம்   2016  நவம்பர் 20 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தியுள்ள இறை இரக்கத்தின் ஆண்டினை  எமது மறை மாவட்டமும் நடைமுறைப்படுத்தும் என ஆயரினால் அறிவிப்பு விடுக்கப்பட்டது  .

இதனை தொடர்ந்து  மகாநாட்டில் இறை இரக்கத்தின் ஆண்டு என்னும் தலைப்பில்  மறை மாவட்டத்திலும் பணித்தளங்களிலும் முன்னெடுக்கப்பட வேண்டிய செயல்பாடுகள் தொடர்பாக ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டது .

இதன் போது திருத்தந்தையினால் பிரகடனப்படுத்தியுள்ள இறை இரக்கத்தின் ஆண்டினை  மறை மாவட்ட  பங்கு மக்களினால்  நாளாந்த  வாழ்வை இறை அனுபவத்துடன்   அன்புடனும்  நோக்குவதனுடாகவும் அதைனை  பிறருடன் பகிந்து கொள்வதனுடன்    இறை இரக்கத்தினை  ஆழப்படுத்தலாம்  எனவும் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது .


ஏனைய இனங்கள் , சமயங்களுடன் இந்த இரக்கத்தை பகிந்து கொள்வதன் ஊடாகவும் ,மாணவர்கள் மத்தியில் இறை இரக்கத்தின் செயல்பாடுகளை கற்பிப்பதன் ஊடாக வும் அதேபோன்று பங்குகளின் ஊடாகவும்   இறை இரக்க ஆண்டை முன்னிட்டு விசேட  குழுக்கள் அமைத்து அந்த குழுக்களின் ஊடக இந்த செயல்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் பங்குகளில் வாழ்கின்ற வறிய குடும்பங்களுக்கான அடிப்படை தேவைகளை இனம் கண்டு அவர்களினது தேவைகளை செய்வதனுடாகவும் இந்த ஆண்டு ஏனைய ஆண்டை விட நல்லவிளைவுகளை செயல்படுத்திய ஆண்டாக செயல் படுத்த முடியும்  என இந்த மகாநாட்டில்  ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டது .   

இடம்பெற்ற நான்காவது மறை மாவட்ட  மகாநாட்டு நிகழ்வில் மறை மாவட்ட பங்கு தந்தையர்கள் , அருட்சகோதரர்கள் . அருட்சகோதரிகள் , பங்கு பக்திசபையினர் மற்றும் பொது நிலையினர் ஆகியோர் கலந்துகொண்டனர் .