மட்டக்களப்பு மாவட்ட தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு சட்டகல்லூரியில் பயிலும் வாய்ப்பு –தொடர்புகொள்ளுமாறு ஜனா அழைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலை கல்வியை பூர்த்திசெய்த தமிழ் மாணவர்களை சட்டத்துறையில் பயில்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாகவும் இது தொடர்பில் ஆர்வமுள்ள மாணவர்களை தொடர்புகொள்ளுமாறும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் இளைஞர் யுவதிகளுக்கிடையில் சட்டத்துறை கல்வி தொடர்பான ஆர்வம்,புரிதல் என்பன மிகவும் குறைந்த நிலையிலேயே உள்ளதாக கருதப்படுகின்றது.

தமிழ் தேசியத்திற்காக இளமையில் ஈர்க்கப்பட்டு கல்வியை துறந்தவன் என்ற அடிப்படையிலும் கல்விதொடர்பான ஆர்வம் கொண்டவன் என்றவகையிலும் எதிர்காலத்தில் தமிழ் தேசியத்தினை உரமூட்ட சட்டக்கல்வியின் தேவையினை உணர்கின்றேன்.

அந்தவகையில் சட்டக்கல்வியை வழங்குவதற்கான வாய்ப்பினை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளேன்.

இந்தவகையில் கா.பொ.த.சாதாரண தரப்பரீட்சையில் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் திறமைச்சித்தியும் கா.பொ.த.உயர்தரத்தில் மூன்று பாடங்களில் சித்தியடைந்த இளைஞர் யுவதிகள் என்னுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றறேன்.

சட்டக்கல்லூரிக்கு புகுதல் தேர்வுக்காக இலவச பயிற்சி வகுப்புகள் துறைசார் நிபுணர்களினால் நடாத்தவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.அத்துடன் தெரிவுசெய்யப்படுபவர்களது பொருளாதார நிலைமையை கருத்தில்கொண்டு புலமைப்பரிசில் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கையினையும் மேற்கொண்டுள்ளேன்.

இந்த வாய்ப்பினை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள முன்வருமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் இளைஞர் யுவதிகளை கோருவதுடன் இன்றைய தமிழ் மக்களின் சூழலை புரிந்துகொண்டு சட்டத்துறையில் நுழைவதற்கு தமிழ் இளைஞர் யுவதிகள் முன்வரவேண்டும்.

இது அரசியல் ஆதாயத்திற்கான வேலைத்திட்டம் அல்ல.தமிழ் மக்களுக்கு இன்றை காலகட்டத்தில் மிகவும் அவசியமானது என்பதனாலேயே இதில் கவனம் செலுத்தியுள்ளேன்.

இதனைத்தொடர்ந்து எதிர்காலத்தில் இலங்கை நிர்வாக சேவை,இலங்கை கல்வி நிர்வாக சேவை,இலங்கை கணக்காளர் சேவை,இலங்கை வெளிநாட்டு சேவை உட்பட உயர் பதவிகளுக்கான போட்டிப்பரீட்சைகளுக்கு தமிழ் மாணவர்களை தயார்படுத்துவதற்கான நடவடிக்கையினையும் முன்னெடுக்கவுள்ளேன்.

இது தொடர்பான விடயங்களை அறிந்துகொள்வதற்கு கோ.கருணாகரம்(ஜனா),இல.07,ஒலிவ்லேன்,மட்டக்களப்பு என்ற முகவரிக்கோ,0776322335என்ற தொலைபேசி இலக்கத்துடனோ அல்லது janaa63@outlook.comஎன்ற மின்னஞ்சல் மூலமாகவே மட்டக்களப்பு மாவட்ட தமிழ் இளைஞர் யுவதிகள் தொடர்புகொள்ளமுடியும்.