மனித பாவனைக்கு உதவாத மரக்கறி வகைகளை விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிரா சட்ட நடவடிக்கை

( லியோ )  


மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின்  காரணமாக  மட்டக்களப்பு மாவட்டத்தில்  மரக்கறி விலைகள் அதிகரித்து காணப்படுகின்றது.

இந்த நிலையில்   மரக்கறி விற்பனையில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் பழுதடைந்த நிலையில்  காணப்படுகின்ற  மனித பாவனைக்கு உதவாத  மரக்கறிகளையும்   விற்பனை செய்து வருகின்றனர்  .

இந்த நிலையில்  மட்டக்களப்பு கோட்டமுனை பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு  அமைய   கோட்டமுனை பொது சுகாதார பரிசோதகர்  வி .சி . சகாதேவன் தலைமையிலான குழுவினர்  இன்று மட்டக்களப்பு  பிரதான  மரக்கறி சந்தையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில்  மனித பாவனைக்கு உதவாத மரக்கறி வகைகள் கைப்பற்றபட்டுள்ளதாக  பொது சுகாதார பரிசோதகர் வி .சி . சகாதேவன்  தெரிவித்தார்   .   

சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்ட மரக்கறி வகைகள் அழிக்கப்பட்டதுடன் , மனித பாவனைக்கு உதவாத மரக்கறி வகைகளை விற்பனை செய்த வியாபாரிகளுக்கு   எதிராக உணவு சட்டத்தின்கீழ்   சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக   கோட்டமுனை பொது சுகாதார பரிசோதகர் வி .சி . சகாதேவன் தெரிவித்தார் .