சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி நெறி

( லியோ


மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக சுயதொழில்  ஊக்குவிப்பு  பிரிவினால்   சிறுதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் பல பயிற்சி நெறிகளை செயல்படுத்தி  வருகின்றது  .

இதன் கீழ் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி மற்றும் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் அபிவிருத்தி  தொடர்பான பயிற்சி நெறி   மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இன்று    இடம்பெற்றது .

இடம்பெற்ற பயிற்சியின் போது சிறுதொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதில் ஏற்படுகின்ற பிரச்சினைகள் , அவர்களின் உற்பத்தி பொருட்கள் எந்த தரத்தில் இருக்க வேண்டும் ,அதேபோன்று நுகர்வோர் எவ்வாறான உற்பத்திகளை நுகர்கின்றனர் , உற்பத்தி பொருட்கள்  சுகாதார முறையில் பாதுகாக்க படவேண்டிய விதம் போன்ற பல விடயங்கள் இந்த பயிற்சி நெறியின் போது அறிவுரைகள் வழங்கப்பட்டது .

இந்நிகழ்வில்  திவிநெகும கருத்திட்ட பயிற்சி நெறி வேலைத்திட்டம் மற்றும் திவிநெகும தலைமையக  முகாமையாளர் திருமதி . கலைச்செல்வி வாமதேவன் , திவிநெகும கருத்திட்ட  முகாமையாளர் செல்வி .பாலசுந்தரம் சாமினி , பிரதேச செயலக  அலுவலக பிரதம கணக்காளர் , வளவாளர்களாக திருமதி .ஆர் . ஜெகநாதன் ,திருமதி . . தாரணி  , கி . வினோத் மற்றும்  மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிறுதொழில் முயற்சியாளர்கள்  ஆகியோர் கலந்துகொண்டனர்.