.அரச வெளிக்கள பெண் உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் கட்டமாக மோட்டார் சைக்கள் வழங்கும் நிகழ்வு

( லியோ )  


மட்டக்களப்பு மாவட்ட அரச சேவையில்  வெளிக்கள உத்தியோகத்தர்களாக  கடமை புரியும்  பெண் உத்தியோகத்தர்களுக்கான  இரண்டாம் கட்டமாக    மோட்டார் சைக்கல்கள்  வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது


 மட்டக்களப்பு மாவட்ட அரச சேவையில் வெளிக்கள உத்தியோகத்தர்களாக  கடமை புரியும்  பெண் உத்தியோகத்தர்களினால் பணம் செலுத்தப்பட்டு பதிவு செய்யப்பட உத்தியோகத்தர்களுக்கான  1192 மோட்டார் சைக்கல்கள் முதல்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது

இதன் இரண்டாம் கட்டமாக 2014  டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர்  பணம் செலுத்தி பதிவு செய்யப்பட  அரச வெளிக்கள பெண்  உத்தியோகத்தர்களுகாக  இன்று   613 மோட்டார் சைக்கல்கள்  இரண்டாம் கட்டமாக   வழங்கும் நிகழ்வு  இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது

மட்டக்களப்பு மாவட்டத்தில்  அரச சேவையில் உள்ள பெண் உத்தியோகத்தர்களுக்காக  மொத்தமாக  1805 மோட்டார் சைக்கல்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக அறிக்கைகள் தெரிவிக்கின்றது . இதன்  மூன்றாம் கட்ட நடவடிக்கைகள் எதிர்வரும்  காலங்களில் இடம்பெறவுள்ளதாக  மாவட்ட செயலக அறிக்கைகள் தெரிவிக்கின்றன .