ரி.எம்.வி.பியின் முன்னாள் தலைவரின் 7ம் ஆண்டு நினைவு நாள் அனுஸ்டிப்பு.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் குமாரசாமி நந்தகோபன்(ரகு) அவர்களின் 7ம் ஆண்டு நினைவு நாள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரால் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
இன்று(14.11.2015) தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித் தலைவர் கந்தவேள் யோகவேள் தலைமையில் காலை 10 மணியளவில் இல 91 வாவிக்கரை வீதி 1இல் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புpலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

சீரற்ற காலைநிலைக்கு மத்தியிலும் குறித்த நேரத்திறகு நிகழ்வு இடம் பெற்றது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பணிக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அத்துடன்; கட்சி தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்கள்.

நிகழ்வில் அமரர் நந்தகோபனின் திரவுருவப் படத்தற்கு மலர் மாலை அணிவித்து ஒளிதீபம் ஏற்றி நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது.

வரவேற்புரை கட்சயின் பிரதி செயலாளர் ஆபிரகாம் ஜோர்ச்பிள்ளை நிகழ்த்த தலைமை உரை பிரதி தலைவர் க.யோகவேள் அவர்களால் ஆற்றப்பட்டது.

தொடர்ந்து சிறப்புரை கட்சியின் திருகோணமலை அமைப்பாளரும் முன்னாள் தலைவர் ரகு அவர்களின் சகோதரருமான கு.நளினகாந்தன் அவர்களினாலும் விசேட உரை கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆஸாத் மௌலானா அவர்களினாலும் நிகழ்த்தப்பட்டு கட்சியின் பொருளாளர் ஆ.தேவராஜா அவர்களின்  நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

இந் நிகழ்வில் கட்சியின் சிரேஸ்ட பிரதி தலைவர் நா.திரவியம்(ஜெயம்) , முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான சோ.புஸ்பராஜா, மகளிர் அணி தலைவர் திருமதி செல்வி மனோகர் முன்னாள் பிரதேச சபை தவிசாளர்கள் மற்றும் உறுப்பனிர்கள் உட்பட பிரதேச மட்ட அமைப்பாளர்கள் இளைஞர் அணி உறுப்பினர்கள் மற்றும் மகளிர் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.

முன்னாள் தலைவர் குமராசாமி நந்தகோபன்(ரகு) மற்றும் அவரது சாரதியும் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ந் திகதி கொழும்பின் புறநகர் பகுதியான அத்துருகிரியவில் வைத்து துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.