சர்வதேச நீரிழிவு தினத்தினை முன்னிட்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் பல்வேறு நிகழ்வு

சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு களுவாஞ்சிகுடி ஆதரா வைத்தியசாலையில ஏற்பாட்டில் பல்வேறு நிகழ்வுகள் இன்று(14.11.2015) சனிக்கிழமை நடைபெற்றது.


இன்று உலகளாவிய ரீதியில் பாரிய சவாலுக்குள்ளாகிவரும் நீரிழிவு நோயில் இருந்து மக்கள் பாதுகாப்பு பெறும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடாத்தப்பட்டுவருகின்றன.

இதன்கீழ் நீரிழிவு நோயின் தாக்கம் மற்றும் அதன் செயற்பாடுகள் மற்றும் அதனை கட்டுப்படுத்துவது தொடர்பான வழிமுறைகள் குறித்து மக்களை விழிப்பூட்டும் ஊர்வலம் நடைபெற்றது.

விசேட கருத்தரங்கினை களுவாஞ்சிகுடி ஆதரா வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி கு.சுகுணன்; தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் வைத்தியசாலையின் தாதியர்கள் மற்றும் ஊழியர்கள்,மாணவர்கள் கலந்துகொண்டனர்.

ஊர்வலம் பட்டிருப்பு சந்தியில் ஆரம்பித்து வைத்தியசாலை வீதியுடாக இராசமணிக்கம் சிலை வரை சென்று பின் பட்டிருப்பு வலய கல்வி பணிமனை வரை சென்று வைத்தியசாலையை வந்தடைந்தது.

இதன்போது நடமாடும் நீரிழிவு விசேட இரத்த பரீசோதனையும் நிகழ்த்தப்பட்டது.இரத்த பரீசோதனையில் நீரழிவு நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதேநேரம் சர்வதேச நீரிழிவு தினத்தினை முன்னிட்டு பட்டிருப்பு தேசிய பாடசாலையில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கும் நடாத்தப்பட்டதாக களுவாஞ்சிகுடி ஆதரா வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி கு.சுகுணன்; தெரிவித்தார்.

நீரிழிவு நோய் தொடர்பில் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதன் மூலம் சமூகத்தில் நீரிழிவின் தாக்கத்தினை கட்டுபடுத்தமுடியும் எனவும் அவர் நம்பிக்கைவெளியிட்டார்.








(படங்கள்:நன்றி வாஞ்சிஒலி)