அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 20561 விவசாயிகளுக்கு உதவி நிதி வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2014மற்றும்2015ஆம் ஆண்டுகளில் பெரும்போக நெற்செய்கையில் ஈடுபட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான மானிய உரக்காப்புறுதி திட்டத்தின் கீழ் காசோலை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் இந்த நிகழ்வு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ந.சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக கமத்தொழில் கமநல காப்புறுதி சபையின் வடகிழக்கு பிரதிப்பணிப்பாளர் எம்.விநாயகமூர்த்தி உட்பட பிரதேச செயலாளர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2014மற்றும்2015ஆம் ஆண்டுகளில் பெரும்போக நெற்செய்கையில் ஈடுபட்டு பாதிக்கப்பட்ட 20561 விவசாயிகளுக்கு இந்த காசொலைகள் வழங்கிவைக்கப்பட்டன.

2014மற்றும்2015ஆம் ஆண்டுகளில் பெரும்போக நெற்செய்கையில் சேதமடைந்த 63823 ஏக்கருக்காக சுமார் 21கோடியே 88இலட்சம் ரூபா வழங்கப்பட்டதாக கமத்தொழில் கமநல காப்புறுதி சபையின் வடகிழக்கு பிரதிப்பணிப்பாளர் எம்.விநாயகமூர்த்தி தெரிவித்தார்.