2015 ஆண்டுக்கான விஞ்ஞான வினாடி வினாப் போட்டி யில் மட்டக்களப்பு கல்வி வலயம் முதல் இடம்

(லியோ


கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் . எம் .டி . .நிசாம்  தலைமையில் நடத்தப்பட்ட   கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான   2015 ஆண்டுக்கான  விஞ்ஞான வினாடி வினாப் போட்டி  கடந்த 07 ஆம் திகதி அக்கரைப்பற்று மத்திய கல்லூரியில் நடைபெற்றது .  

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் இருந்து  கலந்துகொண்ட பாடசாலைகளில்  புனித மிக்கேல் கல்லூரி .புனித சிசிலியா பெண்கள் கல்லூரி மற்றும் வின்சன்ட் பெண்கள் உயர்தர பாடசாலைகள் வெற்றிகளை பெற்றுக்கொண்டன  . 

தமிழ் மொழி மூலமாக  இடம்பெற்ற போட்டிகளில்  மட்டக்களப்பு கல்வி வலயம் முதல் வலயமாக வெற்றியை பெற்றுக்கொண்டது

தமிழ் மொழி போட்டியில்  தரம் 06 இல் பங்கு பற்றிய புனித மிக்கேல் கல்லூரி  முதல் இடத்தினையும் , தரம் 08 இல் பங்கு பற்றிய புனித சிசிலியா பெண்கள் கல்லூரி  03ஆம் இடத்தினையும் , தரம்  09, தரம் 10 இல் பங்கு பற்றிய புனித சிசிலியா பெண்கள் கல்லூரி  முதல் இடத்தினையும் பெற்றுக்கொண்டது  .
ஆங்கில மொழி போட்டிகளில் தரம் 06. தரம் 09  இல் பங்கு பற்றிய வின்சன்ட் பெண்கள் பாடசாலை முதல் இடத்தினையும் , தரம் 10 இல் பங்கு பற்றிய புனித  சிசிலியா பெண்கள் கல்லூரி 03ஆம்  இடத்தினையும் பெற்றுக்கொண்டது .

இடம்பெற்ற பாடசாலைகளுக்கிடையிலான  போட்டிகளின்  தரப்படுத்தலின் அடிப்படையில்  தமிழ் மொழி மூலமான விஞ்ஞான வினாடி வினாப் போட்டிகளில்  முதல் இடத்தினை மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரியும் , ஆங்கில மொழி மூலமான விஞ்ஞான வினாடி வினாப் போட்டிகளில்  முதல் இடத்தினை மட்டக்களப்பு வின்சன்ட் பெண்கள் உயர்தர பாடசாலையும் பெற்றுக்கொண்டது .

வெற்றிகளை  பெற்றுக்கொண்ட பாடசாலைகளுக்கான  வெற்றிக்கிண்ணத்தை மட்டக்களப்பு கல்வி வலய விஞ்ஞான படத்திற்கான பொறுப்பாசிரியாரும் ,ஆசிரிய ஆலோசகருமான . .சர்வேஸ்வரன் பெற்றுக்கொண்டார்

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட  2015 ஆண்டுக்கான  விஞ்ஞான வினாடி வினாப் போட்டிகளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் இருந்து  கலந்துகொண்டு  வெற்றிகளை பெற்று  மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கும் , மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலைகளுக்கும்  பெருமையினை பெற்றுத்தந்த ஆசிரியர்களுக்கும் ,மாணவர்களுக்கும்  மட்டக்களப்பு கல்வி வலய பணிப்பாளர்  .கே பாஸ்கரனும்  ,பாடசாலை  சமூகமும் ,  பாடசாலைகளின் ஆசிரியர்களும் , மாணவர்களும்  மற்றும் பெற்றோர்க பாராட்டுகளை  தெரிவித்துக்கொள்கின்றனர்.