தேசிய நூலக வாரத்தை முன்னிட்டு அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலயம் தேசிய நூலக வாரமாக அனுஷ்டிக்கப்பட்டது

( லியோன் )   தேசிய நூலக வாரத்தை முன்னிட்டு  மட்டக்களப்பு மாவட்டத்தின்  பாடசாலைகளில் பல வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன .


 இதனை யோட்டி கடந்த ஒரு வாரகாலமாக  மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலயம்   அதிபர் திருமதி .என் .தர்மசீலன்  தலைமையில் ஒவ்வொரு வகுப்பறைகளும் ஒவ்வொரு நூலகமாக மாற்றப்பட்டு  தேசிய நூலக வாரமாக அனுஷ்டிக்கப்பட்டது .

இவ்வாரத்தினை  சிறப்பிக்கும் முகமாக இன்று பாடசாலையில் விசேட நிகழ்வு இடம்பெற்றது .
இந்நிகழ்வில் அதிதிகளாக  கலாநிதி . .கே .குணநாதன் மற்றும்  வலய கல்வி பிரதி பணிப்பாளர் , கிராம சேவை உத்தியோகத்தர், மட்டக்களப்பு மாநகர நூலக பொறுப்பதிகாரி  ஆகியோர் கலந்து கொண்டனர் .

இந்நிகழ்வில் உரை ஆற்றிய பாடசாலை அதிபர் இவ்வாறான வாசிப்புக்கள் மாணவர்கள் மத்தியிலே இருகின்ற வாசிப்பு பழக்கத்தை மேன்படுத்தவும் , மாணவர்களின் எதிர் காலத்தில் வாசிப்பு எவ்வாறு இவர்களை  முழு நிறைவாக்கும் , வாசிப்பின் முக்கியத்துவம் போன்ற விடயங்கள் மாணவர் மத்தியில் உணர்த்துவதற்காக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துக்கொண்டார்  .  

இவ்வாறான வேலைத்திட்டத்தினை  இப் பாடசாலையில்   நடத்துவதற்கு ஊக்கமும் பேருதவியாக  இருந்த ஆசிரியர்களுக்கும்,   இதற்கு  முழு பங்களிபு நல்லகிய பாடசாலை மாணவர்களுக்கும் அதிபர் பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டார்