சிறைக்கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மட்டக்களப்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம்

கடந்த ஆட்சியாளர்கள் செய்தி இனப்படுகொலை போதாதா, இன்னும் எமது செத்துக்கொண்டிருக்கவேண்டுமா என மட்டக்களப்பில் நடைபெற்றுவரும் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்ட தாய் ஒருவர் தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுதலைசெய்யக்கோரி ஆறாவது தினமாக மேற்கொண்டுவரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தொடர்ச்சியான மட்டக்களப்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுவருகின்றது.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா)விடுத்த அழைப்பினையடுத்து மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் இந்த அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றுவருகின்றது.

இந்த உண்ணாவிரத போராட்டத்தின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட சிறைகளில் உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொண்டுவரும் சிறைக்கைதிகளின் குடும்பத்தினரும் இந்த போராட்டத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.

இன்று மாலை வரை நடைபெறவுள்ள இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும் தமிழ் உணர்வாளர்களுக்கும் ஏற்பாட்டாளர் கோவிந்தன் கருணாகரம் அழைப்பு விடுத்துள்ளார்.