பார்வையற்றவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து அவர்களின் சமூக மேம்பாடு தொடர்பான சிந்தனைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லும் வகையில் இவை இடம்பெற்றன .
இதன் ஒரு நிகழ்வாக இன்று மட்டக்களப்பு - கல்லடி -நொச்சிமுனை தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை மாணவர்களும் நிருவாகத்தினரும் இணைந்து மட்டக்களப்பு லயன்ஸ் கழகம் அனுசரணையில் சர்வதேச வெள்ளை பிரம்பு தின நிகழ்வு இன்று இடம்பெற்றது .
இதன் ஆரம்ப நிகழ்வாக மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் அருகாமையில் இருந்து தரிசனம் பாடசாலை மாணவர்களும் நிறுவகத்தின் அங்கத்தவர்களும் , லயன்ஸ் கழக உறுப்பினர்களும் ஊர்வலமாக கல்லடி உப்போடை துளசி மண்டபம் வரை சென்றதன் பின் அங்கு தரிசனம் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கிழக்கு மாகாண சுகாதார சுதேச , வைத்திய சமூக சேவை சிறுவர் பராமரிப்பு செயலாளர் . கே .கருணாகரன் , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மதியுரை கண் வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி ஜெ .டி .டயஸ் , சிறப்பு விருந்தினராக லயன் பிராந்திய தலைவர் கலாநிதி வ .சந்திரா மகேந்திரநாதன், மட்டக்களப்பு லயன்ஸ் கழக தலைவர் கே .செல்வராசா , தரிசனம் நிலைய தலைவர் .எம் .தயானந்தன் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் , பாடசாலை மாணவர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்