தங்களது விடுதலை வேண்டி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு வழங்கும் வகையில் சனிக்கிழமை அடையாள உண்ணாவிரதம் ஒன்றுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் துணைத் தலைவருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) அழைப்பு விடுத்துள்ளார்.
சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறலுக்கு எதிரானதும் மனிதாபிமானச் சட்டங்களுக்கு எதிரானதும் சர்வதேச சட்டங்களுக்கு முரணான வகையிலும் பல வருடங்களாக எவ்வித சட்ட நிவாரணமுமின்றி சிறையில் வாடும் எம் தமிழர் உணர்வுகளின் விடியலுக்கான இறுதி முயற்சியாக எமது வரலாற்றுக் கடமையினை நிறைவேற்ற வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.
இவர்களது விடுதலை வேண்டியும் இவர்களது விடுதலை தொடர்பாக சிறிலங்கா அரசிற்கு உரமான அழுத்தம் ஒன்றினை ஏற்படுத்துவதற்காகவும் - அரசியல் கட்சி பேதங்களுக்கு அப்பால் அடையாள உண்ணாவிரத நிகழ்வொன்றினை எதிர்வரும் 17ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.மணி முதல் மாலை 4 மணிவரை மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் நிகழ்த்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சகல தமிழின ஆதரவாளர்களையும், தமிழின உணர்வாளர்கள், தடுத்து வைக்கப்பட்டுள்ளோர்களது உறவுகளையும் இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முதுணைத் தலைவருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தமிழ் உணர்வுடன் அழைக்கின்றார்.
குறிப்பாக, இது எவ்வித அரசியல் சார்பான நிகழ்வால்ல என்பதையும் நீதி மறுக்கப்பட்டவர்களுக்கான நீதியினை பெற்றுக் கொடுக்கும் நிகழ்வென்பதையும் எம்மக்கள் புரிந்து கொண்டு இந்த நிகழ்வில் உணர்வுபூர்வமாக கலந்து கொள்ள வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.