மட்டக்களப்பு சிறைச்சாலையில் தொடரும் உண்ணாவிரதம்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தொடர்ந்து நாங்காவது  நாளாகவும் உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ள  13 தமிழ்  அரசியல் கைதிகளை சந்திக்க   மட்டக்களப்பு மாவட்ட  சர்வமத தலவைர்கள் இன்று காலை  மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு விஜயத்தை மேற்கொண்டனர்

இங்கு  உண்ணாவிரதத்தை  மேற்கொண்டுள்ள அரசியல்  கைதிகளை சந்தித்து  அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டதன்  பின் கைதிகளின் நிலைப்பாடு    தொடர்பாக ஊடகங்களுக்கும் தமது கருத்தினை தெரிவித்துக்கொண்டனர்  .

இவர்களுடன் சிறைச்சாலைக்கு வருகை தந்த   மட்டக்களப்பு மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை  . தேவதாசன்   கூறுகையில் நாங்கள் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் நாங்கள் ஒன்று சேர்ந்து சிறைச்சாலையில் வாடிக்கொண்டிருக்கும்  அரசியல் கைதிகளை  சந்தித்த வேளையில் அவர்களுக்கு ஒரு உற்சாகமும் நம்பிக்கையும் ஊட்டியதாகவும் தெரிவித்துக்கொண்டார்

மேலும் அவர் கூறுகையில்  இவர்களுடைய நம்பிக்கைகாகவும் தாங்கள் பிராத்தனை செய்து , இவர்களது விடுதலைக்காகவும்   இவர்களின் குடும்பங்களை சந்தித்து எங்களால் முடிந்த அளவுக்கு  அந்த குடும்ப  உறவுகளுக்கு உதவிகளை செய்து  அந்த குடும்பங்களின் ஆறுதலுக்காக  எல்லா மதத்தை சார்ந்தவர்களும் ஒரு மனத்தோடு செயல்பட போகின்றோம்   அதற்காகவே நாங்கள் இங்கு வந்தோம் .

அதேவேளை மனிதாமிமான  உணர்வு  ஒன்று இருக்கின்றது  எமது சகோதரர்கள் கஷ்டப்படும்போது அவர்களை பார்க்கும் போது கூட அவர்களுக்கு ஒரு ஆறுதல் கிடைக்கின்றது . அந்த ரீதியில் நாங்கள் அனைவரும் வந்தாகவும் தெரிவித்துக்கொண்டார் .


 இவர்களுக்காக உலக ரீதியில் பல குரல்கள் எழுப்பபடுகின்ற வேளையில்    எமது அரசாங்கமும் இவர்கள் மேல் கவணம் செலுத்தி இவர்களுடைய விடுதலைக்காக துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் இதற்காக தாம் பிராத்தனை செய்வதாக  தெரிவித்துக்கொண்டார்