மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட அமிர்தகழி மெதடிஸ்த முன்பள்ளி சிறார்களின் வருடாந்தம் நடைபெறும் மாபெரும் சிறுவர் சந்தை இன்று பாடசாலை அதிபர் திருமதி ஜெ. ஞானராஜன் தலைமையில் பாடசாலையில் நடைபெற்றது.
இன்று காலை 08.30
மணியளவில் இடம்பெற்ற முன்பள்ளி சிறுவர்களின் சந்தை நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் கலந்துகொண்டு சிறுவர் சந்தையை ஆரம்பித்து வைத்தார் .
அதேவேளை இப்பாடசாலை அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க இவரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலைக்கான மின்சார இணைப்பினை இன்று ஆரம்பித்து வைத்தார் .
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபை பரிசோதகர் ஆர் .ஞானராஜன்,
அமிர்தகழி மெதடிஸ்த ஆலய உக்கிராணகாரர் செல்வி. எஸ் .வசந்தா மற்றும் முன் பள்ளி சிறார்களின் பெற்றோர்களும் , இப்பகுதி பாடசாலை மாணவர்களும் நிகழ்வில் கலந்துகொண்டதுடன், சிறுவர்களினால் விற்பனை செய்யப்பட்ட பொருட்களையும் கொள்வனவு செய்து கொண்டனர்.
இந்நிகழ்வில் முன்பள்ளி சிறார்கள் தங்களின் கலாச்சாரத்திற்கு ஏற்ப உடை அணிந்து சிறுவர் சந்தை நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.