வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

வறுமைக்கோட்டின் கீழ் உள்ள பின்தங்கிய பாடசாலை மாணவர்களை கல்வியில் ஊக்குவிக்கும் விசேட திட்டம் ஒன்றினை தேசிய கலந்துரையாடல் அமைச்சு நடைமுறைப்படுத்திவருகின்றது.


இதன்கீழ் இதன் முதல் நிகழ்வாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட செயகலமும் தேசிய ஒருமைப்பாட்டு கலந்துரையாடல் அமைச்சும் இணைந்து நடாத்திய இந்த நிகழ்வு இன்று காலை மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தேசிய கலந்துரையாடல் அமைச்சின் சிரேஸ்ட உதவி;ச்செயலாளர் ஏ.எல்.எம்.ஹாசீம் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா,மட்டக்களப்பு மாவட்ட செயலக தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் உதவியாளர் வி.சந்திரகுமார் உட்பட தேசிய கலந்துரையாடல் அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது சிறுவர்களின் ஆளுமையினை விருத்திசெய்யும் வகையிலும் அவர்களை அவர்களே பாதுகாக்கும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்வினை மாவட்ட சிறுவர் திணைக்கள இணைப்பாளர் வி.குகதாசன் நிகழ்த்தினார்.

இதன்போது வடக்கு மற்றும் வவுணதீவு பகுதிகளில் உள்ள வறுமைக்கோட்டின் கீழ் உள்ள பின்தங்கிய நிலையில் உள்ள நூறு மாணவர்களுக்கு பாடசாலை பைகள்,பாடசாலை உபகரணங்கள்,பாதணிகள் என்பன வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.