வீடமைப்பு அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபன வங்கியின் புதிய கட்டிட திறப்பு விழா .

 ( லியோன் )   மட்டக்களப்பு நகரில் கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்த வீடமைப்பு அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபன வங்கிக்கிளை புதுப்பொலிவுடன் நவீனமயப்படுத்தப்பட்ட  புதிய கட்டிடம்   இன்று  திறந்து வைக்கப்பட்டது.  

மட்டக்களப்பு வீடமைப்பு அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபன வங்கி   கிளை முகாமையாளர் பாக்கியராஜா ராஜராஜன் தலைமையில்  மட்டக்களப்பு இலக்கம் ,601,A. திருகோணமலை வீதியில்  இன்று காலை 10.00 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது .

இந்நிகழ்வில் வீடமைப்பு அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபன வங்கி பணிப்பாளர்  ஆர் .ஜெ .டி . சில்வா , வீடமைப்பு அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபன வங்கி பிரதம நிறைவேற்று அதிகாரி நிமால் மாமடுவ , சந்தைப்படுத்தல் உதவி பொது  முகாமையாளர்  திருமதி .ஆர் .இமாளி குணதிலக்க , வங்கி பிராந்திய முகாமையாளர் ஆர் .எம் .சுகத பால , வங்கி சந்தைப்படுத்தல் முகாமையாளர்  கமல் பெரேரா மற்றும் வங்கி உத்தியோகத்தர்கள், வங்கி வாடிக்கையாளர்கள் ஆகியோர்  கலந்து கொண்டனர் .

இன்று திறந்து வைக்கப்பட்ட வீடமைப்பு அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபன வங்கி ஊடாக  நிலையான சேமிப்பு கணக்கு ,தனி நபர் கணக்கு ,வீட்டுக்கடன் வசதிகள் ,நுண்கடன் வசதிகள் , கால்நடை உற்பத்தியாளர்களுக்ககான கடன் வசதிகள் , வாகன குத்தகைக்கடன் , ஊழியர் சேமலாப நிதிக்கடன் ,சௌபாக்கியா  சிறிய நடுத்தரமான முயற்சியாளர்களுக்கான கடன் , சிறுவர் சேமிப்பு (அரும்புகள் ) முதியோர்களுக்கான ஒய்வூதியக்கடன் போன்ற  கொடுக்கல் வாங்கல்  நடவடிக்கைகள்  இந்த வங்கி ஊடாக  இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது .