சிவானந்த தேசிய பாடசாலையின் தேசிய வாசிப்பு மாதத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் .

(லியோன் )  

தேசிய வாசிப்பு மாதத்தின்  இறுதி நாள் நிகழ்வுகள்   இன்று மட்டக்களப்பு கல்லடி சிவானந்த தேசிய பாடசாலையின்   அதிபர் கே . மனோராஜ் தலைமையில் பாடசாலை மண்டபத்தில்  இடம்பெற்றது .

இன்று இடம்பெற்ற நிகழ்வானது  மாணவர்கள்  மத்தியில் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கவும் வாசிப்பின் ஊடாக சிறந்த சமூகத்தை உருவாகும் நோக்கிலும் , மாணவர்களுக்கு  வாசிப்பு தொடர்பான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டு மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி  பெற்றமானவர்களுக்கு  பரிசில்களும் வழங்கப்பட்டது .இந்நிகழ்வின் போது பாடசாலை மாணவர்களின் கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றது  .


இந்நிகழ்வில்  ஆன்மீக அதிதியாக  கல்லடி இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி சதுர்புஜானந்தஜி  கலந்துகொண்டதுடன் , இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண நூலக விஞ்ஞான ஒருங்கிணைப்பாளரும் , விரிவுரையாளருமான கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட நூலக அதிகாரி  டப்ளியு .ஜெ . ஜெயராஜ் ,கௌரவ அதிதியாக மண்முனை வடக்கு கோட்டக்கல்வி அதிகாரி  .சுகுமாரன் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலய  உதவி கல்விப்பணிப்பாளர் ( தமிழ் ) டி .யுவராஜா மற்றும் இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் , பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் .
  

தேசிய வாசிப்பு மாதத்தில் சிறந்த வகுப்பறை நூலகமாக தெரிவு செய்யப்பட வகுப்பறைகளுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டதுடன், தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு பாடசாலையில் நடத்தப்பட்ட போட்டி பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை  கௌரவிக்கும் நிகழ்வும்  இடம்பெற்றது .