கிழக்கு மாகாணத்தில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்தினை இல்லாமல் செய்ய உதவி –அவுஸ்ரேலியா

கிழக்கு மாகாணத்தில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்தினை இல்லாமல்செய்வதற்கான உதவிகளை வழங்க அவுஸ்ரேலியா அரசாங்கம் முன்வந்துள்ளது.

மட்டக்களப்புக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலிய தூதுவர் ஹி ரொபின் முடி இன்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு ஈஸ்ற் லகூன் ஹோட்டலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாசீர் நசீர் அகமட்டை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது கிழக்கு மாகாணத்தின் பொருளாதார நிலைமைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன் யுத்தத்தின் பின்னரான மீள்கட்டுமானம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இந்த சந்திப்பின்போது அவுஸ்ரேலிய தூதரக அதிகாரிகள்,பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாணத்தில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு படகும் மூலம் செல்வோர் தற்போது குறைந்துள்ளதாகவும் அவற்றினை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் இங்கு நன்றி அவுஸ்ரேலிய தூதுவரினால் நன்றி தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் அவுஸ்ரேலிய முதலீட்டாளர்கள் முதலீகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக முதலமைச்சரிடம் தூதுவர் உறுதியளித்தார்.

வெளிநாட்டு முதலீகளை அதிகரித்து அதன்மூலம் கிழக்கு மாகாணத்தில் நிலவும் தொழில் இல்லா திண்டாட்டத்தினை குறைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக தூதுவர் தெரிவித்தார்.

இதேபோன்று கிழக்கு மாகாணம் சுற்றுலாத்துறையில் அபிவிருத்தியை காண்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தமது நாட்டினால் வழங்கப்படும் உதவிகள் அனைத்து இன மக்களுக்கும் செல்வதை உறுதிப்படுத்தும் கையில் அமையவேண்டும் எனவும் அவுஸ்ரேலிய தூதுவர் முதலமைச்சரிடம் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்பகளை பெற்றுக்கொள்ளும் வகையில் தொழில்பயிற்சிகளை வழங்குவதற்கு முதல் கட்டமாக 20மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.