மட்டக்களப்பு புனித மிக்கேல் தேசிய பாடசாலையில் நவராத்திரி தின நிகழ்வுகள் .

 (லியோன் )    

நவராத்திரி தினத்தினை  முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

இதனை முன்னிட்டு  இன்று காலை மட்டக்களப்பு புனித மிக்கேல் தேசிய பாடசாலையில்   அதிபர் ஆர் .பெஸ்லி யோவாஸ்  தலைமையில் நவராத்திரி தின நிகழ்வுகள்  பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில்   நடைபெற்றது.

கல்வி,செல்வம்,வீரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு முப்பெரும் தேவிகளுக்குரிய தினமாக இந்த நவராத்திரி தினம் ஒன்பது நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது.

இந்த நிகழ்வில் கௌரவ அதிதிகளாக  மட்டக்களப்பு கல்லடி இராமகிருஷ்ண மிசன்  சுவாமி சதுர்புஜாநந்த மகராஜ்  மற்றும்  புனித மிக்கேல் கல்லூரி  பழைய மாணவ சங்க தலைவர்  அருட்தந்தை  போல் சற்குணநாயகம் , சிறப்பு அதிதிகளாக கிழக்கு பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளர்  டாக்டர் .பாலை கைலாசநாத சர்மா , புனித மிக்கேல் கல்லூரி பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளர் எந்திரி வை .பரமகுரு நாதன்  மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் .

நிகழ்வின் போது  முப்பெரும் தேவியர்களுக்கு விசேட பூஜைகள் இடம்பெற்றதுடன்  தொடர்ந்து  மாணவர்களின் விசேட கலை கலாசார நிகழ்வுகள்  இடம்பெற்றது .