யானை தாக்கி கணவனும் மனைவியும் பலி – தாந்தாமலையில் சம்பவம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை, நாற்பது வட்டை பகுதியில் யானை தாக்கியதன் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் இருவரும் கணவனும் மனைவியும் என கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு யானை குறித்தவர்களின் வீட்டை தாக்கியபோது வீடு உடைந்த நிலையில் அதனுள் இருந்த மனைவி உயிரிழந்த நிலையில் வெளியில் ஓடிய கணவரையும் யானை தாக்கியதன் காரணமாக அவரும் உயிரிழந்துள்ளதாகவும் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.