தந்தை செலுத்திய காரில் அகப்பட்டு அன்வர் சதாத் பாத்திமா (வயது 8) என்ற பெண் குழந்தை சனிக்கிழமை பலியானதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
புதிய நகர சபை மண்டப வீதி, கல்முனைக்குடி 14 இல் அமைந்துள்ள தனது வீட்டு கராஜில் நிறுத்தி வைப்பதற்காக தந்தை காரைச் செலுத்திச் சென்றபோது ஏற்கெனவே அந்தக் காரிலிருந்து இறங்கி நின்ற பெண் குழந்தை நசுங்குண்டு பலியாகியுள்ளது.
பல்கலைக் கழக விரிவுரையாளரான அன்வர் சதாத் குடும்பத்தினரோடு பயணம் சென்று விட்டு வீட்டுக்கு வந்து கராஜில் காரை நிறுத்தி வைக்க முயன்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அச்சமயம், தனது குழந்தையைக் காப்பாற்ற தாய் ஓடிச்சென்ற போது அவரும் காருக்கும் சுவருக்கும் இடையில் அகப்பட்டு காயமடைந்துள்ளார்.
இச்சம்பவத்தில் காரைச் செலுத்திய தந்தை அன்வர் சதாத் (வயது 40) கைது செய்யப்பட்டுள்ளார்;.
காயமடைந்த தாய் றொசானா சதாத் (வயது 38) கல்முனை அஷ்ரப் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக கல்முனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.