கல்குடா வலயத்தில் செங்கலடி மத்திய கல்லூரியில் அதிகமானவர்கள் சித்தி

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் ஆகக் கூடுதலாக சித்தியடைந்த பாடசாலையாக செங்கலடி மத்திய கல்லூரி திகழ்கிறது.

இக்கல்லூரியிலிருந்து இம்முறை 5ம்ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 25 பேர் சித்தி அடைந்துள்ளார்கள்.

இப்பாடசாலையில் ஆகக் கூடிய மாணவர்கள் சித்திடைந்து சரித்திரம் படைத்திருப்பது இதுவே முதற் தடவையாகும்.

ஆசிரியைகளான வி. ஜெயலெட்சுமி மைனாவதி ஜெயராஜா ஆகியோர்; ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்ககாக மாணவர்களைத் தயார்படுத்தி சித்தியடைய வழிகோலியிருந்தார்கள் என்று பாடசாலை அதிபர் கே. அருணாசலம் தெரிவித்தார்.