மட்டக்களப்பு மாவட்ட செயலக வாணி விழா நிகழ்வுகள் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது .

(லியோன் )    மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில்  (போசகர் ) மாவட்ட  அரசாங்க அதிபர் பி எஸ் .எம் .சார்ள்ஸ் தலைமையில்  வாணி விழா நிகழ்வுகள்  இன்று மாவட்ட செயலகத்தில்  மிக சிறப்பாக  இடம்பெற்றது .
 கல்வி,செல்வம்,வீரம் ஆகியவற்றை  கொண்டு  விளங்கும் முப்பெரும் தேவிகளுக்குரிய தினமாக இந்த நவராத்திரி தின ஒன்பது நாட்களும் அனுஸ்டிக்கப்படுகின்றது.

இதனை முன்னிட்டு  மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்  வாணி விழா சிறப்பு  நிகழ்வுகள் இடம்பெற்றது . இந்நிகழ்வில்   மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்களின் பஜனைகளும் . மகாஜன கல்லூரி மற்றும் வின்சன்ட் மகளீர் பாடசாலை மாணவர்களின் கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றது .

இதனை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட செயலக பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ . .ஜெகதீஸ்வரக் குருக்களினால் விசேட வாணி விழா சிறப்பு பூசைகள் நடாத்தப்பட்டது  .

 இந்நிகழ்வில்  ஆன்மீக அதிதியாக  மட்டக்களப்பு இராமகிஷ்ணமிஷன் தலைவர்  சுவாமி சதுர்புஜானந்தாஜி கலந்துகொண்டார் .  

இடம்பெற்ற  வாணி விழா நிகழ்வில்   “கலை வாணி கல்விக்கான ஆதாரம்”  எனும் தொனியில்  பொருளில் வருடா வருடம் மாவட்ட செயலக நலன்புரிச் சங்கத்தினால்  தெரிவு செய்யப்பட  வறிய மாணவர்களுக்கு  வழங்கப்படும் பாடசாலை உபகரணங்கள் இந்நிகழ்வின் போது  மட்டக்களப்பு மாவட்ட  அரசாங்க அதிபரினால் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது .

 இந்நிகழ்வில்   மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர்  .எஸ் .கிரிதரன்  . உதவி அரசாங்க அதிபர் .ரங்கநாதன் , மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்களும் ,மாணவர்களும் கலந்துகொண்டனர் .