குமாரபுரம் -புன்னச்சோலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

( லியோன்மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  குமாரபுரம்புன்னைச்சோலை பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார் .

 மட்டக்களப்பு நகரில் இருந்து புன்னச்சோலை நோக்கி சென்ற மோட்டார் சைக்களுடன்  எதிரே வந்த முக்சக்கரவண்டி மோதியதன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவிக்கின்றனர் .

இதன்  போது  மோட்டார் சைக்களில் வந்த நபர்  காயமடைந்துள்ளதாகவும்   பொலிசார் தெரிவிக்கின்றனர்

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு  பொலிசார்  மேற்கொண்டு வருகின்றனர் .