கிழக்குமாகாண உள்ளூராட்சி மன்றங்களின் கொத்தணி முறையிலான சுத்திகரிப்பு வேலைத்திட்டம்

( லியோன் )   ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவின் சிந்தனைக்கு அமைவாக கிழக்கு மாகாண முதல் அமைச்சரின் வழிகாட்டலுக்கு  இணங்க  கிழக்குமாகாண உள்ளூராட்சி மன்றங்களின் கொத்தணி முறையிலான சுத்திகரிப்பு  2015  வேலைத்திட்டம் (UNOPS)   ஐக்கிய நாடுகள் திட்ட அமுலாக்களுக்கான அலுவலகத்துடன்  இணைந்து  ஒவ்வொரு பிரதேச சபைகளிலும்  தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
 இதன் ஒரு பகுதி நேற்றைய தினம்  காத்தான்குடி நகரசபை பகுதியில் கிழக்கு மாகாண  முதல் அமைச்சரின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது .   

இதன் இரண்டாம் நாள் வேலைத்திட்டம் இன்று  ஆரையம்பதி பிரதேச சபை செயலாளர்  திருமதி .சி .ஜெ .அருள்பிரகாசம் தலைமையில் ஆரையம்பதி மண்முனைப்பற்று பிரதேச சபை பகுதியில்   ஆரம்பிக்கப்பட்டது .

இந்நிகழ்வில் உள்ளூராட்சி அமைச்சின் உதவிச் செயலாளர் ஜனாப் றாபி ,மண்முனைப் பற்று பிரதேச செயலாளர்  வி . வாசுதேவன் ,உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக சன சமூக  அபிவிருத்தி உத்தியோகத்தர்  பற்பராசு , முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜனாப் பரீட், (UNOPS)   ஐக்கிய நாடுகள் திட்ட  உத்தியோகத்தர்கள்  , நகரசபை செயலாளர் சர்வேஸ்வரன் மற்றும் களுதாவளை பிரதேச செயலாளர்  திருமதி . வசந்தராசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில்  கலந்துகொண்ட மண்முனைப்பற்று பிரதேச செயலாளர்  உரை ஆற்றுகையில்    ஒரு நாடு வளமுள்ள நாடாக மாறவேண்டும் என்றால் அந்த நாட்டின் உள்ள  சூழல் மக்களுக்கு பொறுத்தமானதாக அமைய வேண்டும் .

அந்த வகையில் மக்கள் அந்த சூழலுடன் மிகவும் இணைந்தவர்களாகவும் , சூழலை பற்றி  கரிசனை உள்ளவர்களாகவும் இருக்கவேண்டும் . இதற்காக உலக நாடுகளில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வேளையில் இலங்கையிலும் இது போன்று ஒரு வேலைத்திட்டத்தை  அமுல்படுத்த வேண்டும் என்ற  ரீதியில் ஜனாதிபதியின்  எண்ணத்தில் உதித்த நிகழ்வாக  இது இருக்கின்றது .

 கடந்த ஆண்டில் இந்தியாவில்  கிலீனிங்  இந்தியா என்ற ஒரு திட்டத்தை பிரதமர் மோடி அவர்கள் ஆரம்பித்து வைத்தார் . அது உலகலாவியல் ரீதியில் அது பெறும் வரவேற்பை பெற்றது .

அதேபோல் இந்த ஆண்டில்  நமது நாட்டில் கரையோரங்களை முற்றாக சுத்தப்படுத்த வேண்டும்  என்ற திட்டம் ஆரம்பிக்கப்பட்டது ,அதனை நாம் எல்லோரும் கடந்த மாதத்தில் கரையோரங்களை சுத்தப்படுத்தும்  வேலைத் திட்டத்தினை ஆரம்பித்தோம் , அது நமக்கு சந்தோஷத்தையும் , வெற்றி அளிக்க கூடிய நிகழ்வாகவும் இருந்து .

அதனை தொடர்ந்து  நமது மாகாணமும் மாகாண முதல் அமைச்சரும் இதே போன்று மாகாண ரீதியில் ஒழுங்கமைக்க வேண்டும் என்பதற்காக கொத்தணி  ரீதியான  அடிப்படையில் இந்த நிகழ்வை ஒழுங்கு செய்து இருக்கின்றார் .

இதேபோன்று நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும் . இந்த ஆண்டில் மற்றும் இல்லாமல் தொடர்ச்சியாக இந்த சுத்திகரிப்பு இடம்பெற வேண்டும் . அதேவேளை சூழல் மக்களுக்கு பொருத்தமானதாக அமைய மக்களும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் . இதனை  அரசு மாத்திரம் செய்யமுடியாதுஇது தொடர்பாக மக்கள் விழிப்புணர்வுள்ளவர்களாக இருந்தல் வேண்டும். அப்போதுதான்   எமது நாட்டையும்  எமது சூழலையும்  ஒரு வளமுள்ள நாடாகவும் , சுகாதாரமான சூழலையும் மிளிர செய்யமுடியும் என்பதனை தான் தெரிவித்து கொள்வதாக நிகழ்வில் தெரிவித்துகொண்டார் .