உலக பாரிசவாத நோய் தின விழிப்புணர்வு நிகழ்வு

( லியோன்உலக பாரிசவாத நோய் தினத்தினை முன்னிட்டு  இன்று மட்டக்களப்பு  போதனா வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில்   பாரிசவாத நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்பு போதனா  வைத்தியசாலை   பணிப்பாளர்  வைத்தியர் இப்ரால் லெப்பை தலைமையில் இடம்பெற்றது

இந்நிகழ்வில்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை  பிரதி பணிப்பாளர் திருமதி . கிரேஸ் நவரட்ணராஜா ,விசேட பொது வைத்திய நிபுணர்களான வைத்தியர்  பி . கனகபாபு , வைத்தியர் .பி . மயூரன் ,வைத்தியர் . கே ,அருள்மொழி , வைத்தியர்  எம் .அகிலன்  விசேட நரம்பியல் நிபுணர்  வைத்தியர் . டி . தீபாகரன்வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் , வைத்தியசாலை  ஊழியர்கள் மற்றும்  வெளி நோயாளர் பிரிவில்   சிகிச்சை பெறுவதற்காக வருகை தந்த பொதுமக்களும் கலந்துகொண்டனர் .  

இந்நிகழ்வின் போது உரையாற்றிய  வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் வைத்தியர் திருமதி . கிரேஸ் நவரட்ணராஜா மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று முதல் பாரிசவாத  நோயாளர்களுக்காக  சிகிச்சை  பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்  , இந்நோய்க்கு உள்ளான நோயாளர்களுக்கான  மருந்து சுகாதார அமைச்சின் ஊடாக பெறப்பட்டு சிகிச்சை அளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்  .

மேலும் அவர் கூறுகையில் பாரிசவாத நோய்க்கு உள்ளான ஒருவர் நான்கு மணித்தியாலத்திற்குள் நோய்க்கான மருந்தினை எடுத்துக்கொண்டால் அந்த நோயில் இருந்து குணமடைய வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துக்கொண்டார் .

 எனவே இந்த நோய் தொடர்பான ஆலோசனைகளை மற்றும் மக்களுக்கு  நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துக்கொண்டார் .