சுவிஸ்ட்ஸர்லாந்தில் முனைப்பின் கதம்பமாலை நிகழ்வில் மோகனப்பிரியனின் சிறப்பு நடன நிகழ்வுகள்

இலங்கையின் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைதரத்தை மேம்படுத்தும் நோக்கில் சுவிஸ்ட்ஸர்லாந்து நாட்டில்  இயங்கும் முனைப்புநிறுவனம் வருடாந்தம் நடாத்தும் கதம்பமாலை 2015 நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 27.09.2015 அன்று காலை 11.00மணிமுதல் PFARREI ST.KARL,SPITALSTRASSE 93,6004 LUZERN ,SWITZERLAND எனும் விலாசத்தில் நடைபெறவுள்ளது.

இதில் பல்வேறு கலைநிகழ்வுகள் நடைபெறவுள்ளன.நிகழ்வில் சர்வதேச ரீதியில் நிகழ்ச்சிகளை வழங்கிவரும் நடனத்துறையில் இளம் நுண்கலை,முதுநுண்கலை பட்டங்களைப்பெற்று தற்போதுமுனைவர் ஆய்வுப்பட்டப்படிப்புக்காக தஞ்சாவுர் தமிழ்பல்கலைக்கழகத்தில் ஆய்வினை மேற்கொள்ளும் மட்டக்களப்பினைச்சேர்ந்த தவராஐா மோகனப்பிரியனின் சிறப்பு நடனநிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

நாட்டிய சாதனா. நாட்டிய கலை அரசன் விருது,  நடன கலை அரசன் விருதுவளரும் சாதனையாளர் விருது,  சுவாமி விவேகானந்தர் விருது என தமது நடனத்திறமைக்காக பல விருதுகளை நடனத்துறையில் பெற்றுக்கொண்ட இவர் தற்போது சிங்கப்புர் கலைப்பேரவையில் நடனக்கலைஞராகவும்விரிவுரையாளராகவும் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

நிகழ்வுக்கு அனுமதி இலவசம் என்பதுடன் ஆர்வமுள்ள அனைவரையும் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு முனைப்பு நிறுவனத்தின் நிருவாகப்பணிப்பாளர் தா.வேதநாயகம் தெரிவித்தார்.