காத்தான்குடி போக்குவரத்து பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரிவில் இரவு துவிச்சக்கர வண்டி பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது 100 இற்கும் மேற்பட்ட மின்குமிழ்கள் இல்லாத துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டு பொலிஸ் பிரிவில் வைக்கப்பட்டன.
துவிச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு அவர்கள் மூலமே மின்குமிழ்கள் வாங்கி பொருத்தப்பட வேண்டும் எனவும் விபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.
அந்த வகையில் கைப்பற்றப்பட்ட துவிச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்களின் மூலம் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டு மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் யுனிசெப் மற்றும் சர்வோதய நிறுவனம் இணைந்து நடாத்தும் சமூகமட்டத்தில் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் இணைப்பாளர் த.மயூரன் அவர்களும் மற்றும் காத்தன்குடி போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி து~hர ஜெயலால் அவர்களும் மற்றும் பல பொலிஸ் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.