ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் மகப்பேற்று கட்டிடத் திறப்பு விழா

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் பிரிவிலுள்ள ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் மகப்பேற்று கட்டிடத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.


வைத்தியசாலை அத்தியட்சகர் எம்.எச்.எம். தாரிக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்து வைத்தார்.

2013 ஆம் ஆண்டு அப்போதைய மாகாண சுகாதார அமைச்சராக இருந்த எம்.எஸ். சுபைரின் 90 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இந்த மகப்பேற்று விடுதி நிர்மாண வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டு மேலும் 30 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் முழுமை பெற்றதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ். சதுர்முகம் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே. கருணாகரன், மாகாண சுகாதாரப் பணிப்பாளர் கே. முருகானந்தன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ். சதுர்முகம், ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா உட்பட இன்னும் பல சுகாதாரத்துறை அதிகாரிகளும் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.